கடலூரில் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் 109-வது ஜெயந்தியை முன்னிட்டு, அவரது நினைவாக அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பி. ராஜ்குமார் தலைமை வகித்தார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் ஏ. ராஜசேகர் முன்னிலை வகித்தார்.

இதையடுத்து மணிமண்டபத்தில் அமைந்துள்ள எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஈ.எம்.ஆர். எஸ். விஜய் மற்றும் விருத்தாசலம் நகரக் கழகச் செயலாளர் எம். அப்பாஸ் அலி , தொழிலதிபர் செல்வக்குமார் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்