இந்திய நாட்டின் மீதும், மக்கள் மீதும் சமூக அக்கறையும், நாட்டு நலனையும் முக்கியத்துவமாக கொண்டு செயல்பட்டு வரும் சமூக நலன் பத்திரிகைகள், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்கள் 50 ஆண்டுகால ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து வாக்களிப்பது வாக்காளர்கள் ஒவ்வொருவரின் முக்கிய கடமை என்பதை வலியுறுத்துகின்றன. வாக்காளர்கள் பணத்திற்கோ, பொருளிற்கோ அல்லது அவர்கள் சொல்லும் ஆசை வார்த்தைகளுக்கு ஏமாந்தோ அல்லது ஆசைப்பட்டு வாங்கிக் கொண்டு வாக்களித்தால், நாட்டில் மீண்டும் ஊழல் ஆட்சிதான் கொண்டு வரப்படும். இவர்கள் தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சியைத் கொடுக்க முடியாது. மேலும், ஊழலற்ற ஆட்சியால்தான் ஏழை, நடுத்தர மக்களின் முன்னேற்றம் அடங்கியுள்ளது. அதை தமிழக வெற்றிக் கழகம் ஐந்து மாத காலத்தில் தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சியை கொண்டு வந்து நிரூபித்துள்ளது. தவிர, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்கள் மத்தியில், "எதிர்க்கட்சிகள் அதிமுகவில் நின்று ஜெயித்துவிட்டு, இன்று தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்து அதே தொகுதியில் போட்டியிடுகிறார்கள்" என்று பிரச்சாரம் செய்தாலும், அவர்கள் மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஊழல் ஆட்சியைத்தான் கொடுத்திருக்க முடியும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இவர்கள் வெற்றியைக் கூட மக்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஊழலற்ற ஆட்சியைக் கொண்டுவர மீண்டும் அதே தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தில் போட்டியிடுவது மக்களுக்காக மக்களாட்சியை கொடுக்கவே என்பதை

வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் எவ்வளவு பொய் பிரச்சாரங்களை ஊடகங்கள் மூலம் நடத்தினாலும், உண்மை எது என்பதை சிந்தியுங்கள். எனவே, இரண்டு தொகுதி வேட்பாளர்களும்

முன்பொருமுறை வெற்றி பெற்றிருந்தாலும், அவர்களால் மீண்டும் ஊழல் ஆட்சிதான் கொடுக்க முடியும் என்பதை உணர்ந்து, தங்கள் பதவியை ராஜினாமா செய்தது ஊழலற்ற ஆட்சியை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான். அதை மக்கள் மனப்பூர்வமாக ஏற்று, மக்களாட்சிக்கு மக்கள் ஆதரவளிப்பதுதான் மக்களின் உண்மையான ஜனநாயகத் தேர்தல்! அது மட்டுமல்ல, ஏழை, எளிய மக்களின் பாதுகாப்புக்குக் கூட கேள்விக்குறியான அதிமுக, திமுக ஆட்சி இனி தேவையா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். இதைவிட மிக முக்கியமானது! பெண்களின் பாலியல் வன்கொடுமைகள், சிறுமிகளின் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிமுக, திமுக ஆட்சியில் நடந்து வந்தது. அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். காவல்துறையில் பணத்தைக் கொடுத்து சரிசெய்து விடுவார்கள். இல்லையென்றால் மந்திரிகளைக் கொண்டு சரிசெய்து விடுவார்கள். இப்படித்தான் ஜெம் கிரானைட் தொழிலதிபர்கள் போன்ற எத்தனையோ பணக்காரர்கள் செய்த கொடுமைகள் வெளிவராமல் மறைக்கப்பட்டுள்ளன. சட்டத்தை விலைக்கு வாங்கி தங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொண்டனர். அதேபோல் தான், எங்களது பத்திரிகைத் துறையிலும், கார்ப்பரேட் நிறுவன தொழிலதிபர்கள் பத்திரிகையின் சட்டங்களைப் பணத்தை வைத்து செய்தித் துறையில் தங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொண்டனர். அதுதான் சர்குலேஷன் சட்டம்; அது ஒரு ஏமாற்றுச் சட்டம். அந்த ஏமாற்றுச் சட்டத்தை வைத்து எவ்வளவு பேர் ஏமாந்தார்கள்? எவ்வளவு பேர் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தார்கள்? எவ்வளவு பேர் தகுதியற்ற பத்திரிகைகள் சலுகை, விளம்பரங்களை அனுபவித்தனர்? இதையெல்லாம் தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய அரசு அதிகாரிகள் கணக்கெடுத்தால் பல ஆயிரம் கோடிகள் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது மட்டுமல்ல, இந்த சர்குலேஷன் சட்டத்தில் காட்டக்கூடிய ஆடிட் கணக்குகளும் போலியானவையே. நேற்று கூட எமது நிருபர் தேனி மாவட்டத்தில் இருந்து பேசுகிறார். மதுரையிலிருந்து வெளிவரக்கூடிய ஒரு தினசரி பத்திரிகை, நிருபர்களிடம் ஒரு பத்திரிகை 50 ரூபாய் என்று விற்பனை செய்து பத்திரிகை நடத்துவதாகத் தகவல். தினசரி இவர்கள் கணக்குப்படி பத்தாயிரம் பிரதிகள் அடிக்க வேண்டும். ஆனால், அதிகபட்சம் 500 பிரதிகள் அடித்தாலே அதிகம் என்கிறார்கள். அப்படிப்பட்ட பத்திரிகைகளும் சலுகைகளைப் பெற்று பத்திரிகை துறையை ஏமாற்றி வந்து கொண்டிருக்கிறது. இதுதான் திமுக, அதிமுக ஆட்சியில் நடக்கின்ற ஊழல் ஆட்சி! பத்திரிகைத் துறையிலேயே ஊழல் என்றால், ஊழலை எங்கே இவர்கள் எதிர்த்துப் போராடுவார்கள்? இப்படி பத்திரிகைக்குத் தகுதியற்ற, ஊழலுக்கு ஒத்து ஊதக்கூடிய பத்திரிகைகள் எல்லாம் சலுகை, விளம்பரங்களை அனுபவித்ததுதான் பத்திரிகைத் துறையின் மிகப்பெரிய கேவலம். எனவே, தாராபுரம், மதுராந்தகம் தொகுதி மக்கள், இந்த உண்மைகள் எல்லாம் எந்தப் பத்திரிகையிலும் வெளிவராத செய்திகள்! ஆகையால், வாக்களிப்பது உங்கள் நலனுக்காக மட்டுமல்ல, இந்த நாட்டின் தேச நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் என்பதை சிந்தித்து ஊழலற்ற ஆட்சிக்கு ஆதரவு தருவது எதிர்கால அரசியலின் மற்றும் மக்களின் முன்னேற்றம். அது வருங்கால தலைமுறைகளுக்கும், இளைஞர்களுக்கான முன்னேற்றம் என்பதை உணர்ந்து வாக்களிக்க சமூக நலன் பத்திரிகைகளின் முக்கிய கருத்து. மக்களுக்காக……! மக்களின் குரலாக எப்போதும்! மக்கள் அதிகாரம் உங்களுடன்….!