கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சிறுநெசலூர் கிராமப் பெரிய ஏரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கிராமப் பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா வேல்முருகன் பச்சைக்கொடி காட்டி விழாவைத் தொடங்கி வைத்தார்.
இதில் சிறுநெசலூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, கெண்டை, கெளுத்தி, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு ரக மீன்களைப் பிடித்துச் சென்றனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற இத்திருவிழாவால் கிராம மக்கள் உற்சாகமடைந்ததுடன், ஏரிப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டது.


