கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. பள்ளி உள்ளிட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்கள் முறையான பாதுகாப்பு விதிமுறைகளின்படி இயக்கப்படுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், விபத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் பள்ளி வாகனத்தின் புகைப்படமும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு முறையான ஓட்டுநர் உரிமம் உள்ளதா? சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட வயது மற்றும் தகுதிகள் உள்ளனவா? வாகனங்களை இயக்குவதற்கு முன்பு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும், சில பள்ளி வாகன ஓட்டுநர்கள் மதுபோதையில் வாகனம் இயக்குவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இதுதொடர்பாக ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை

மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?

கடலூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்க வேண்டும்.

விருத்தாசலம் RTO அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளி வாகனத்தையும் நேரடியாக ஆய்வு செய்து, ஓட்டுநர்களின் உரிமம், வயது, தகுதி, வாகனத்தின் தகுதிச் சான்றிதழ், காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்.

ஓட்டுநர்களுக்கு திடீர் மதுபோதைப் பரிசோதனை நடத்த வேண்டும். விதிமுறைகளை மீறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலமைச்சரின் கவனத்திற்கு!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, பள்ளி மாணவர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் பள்ளி வாகனங்களைத் தீவிரமாக ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.

விபத்து ஏற்பட்ட பிறகு விசாரணை நடத்துவதைவிட, விபத்து ஏற்படுவதற்கு முன்பே தடுப்பதே அரசின் கடமை.

பள்ளி வாகனங்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் பள்ளி நிர்வாகங்கள் மீதும், தகுதியற்ற ஓட்டுநர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களின் உயிர் பாதுகாப்பு விளையாட்டு அல்ல! இனியாவது அதிகாரிகள் விழித்துக்கொள்வார்களா