கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் திடீர் கனமழையைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி கடலூர் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (நவம்பர் 3, 2026) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடலூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு மட்டுமே இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், மாவட்டத்தின் மற்ற தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு: இந்த விடுமுறை அறிவிப்பு கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் வழக்கம்போல் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.



