தமிழகத்தில் ₹13,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகை தர உள்ளார்.

டெல்லியில் இருந்து காலை 8.15 மணியளவில் தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர், காலை 11.00 முதல் 11.15 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைவார். அங்கிருந்து நேரடியாக போரூர் புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திற்குச் சென்று, பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் வரை மெட்ரோவில் பயணம் செய்து திரும்புவார். இந்த மெட்ரோ பயணத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யும் இணைந்து பங்கேற்க வாய்ப்புள்ளது.

பிரதமர் தொடங்கி வைக்க உள்ள முக்கிய திட்டம், சென்னை மெட்ரோ ரயில் Phase-II-இன் பூந்தமல்லி–வடபழனி வழித்தடம். சுமார் 14.5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடம் ₹4,900 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 3.7 கி.மீ இரட்டை அடுக்கு அமைப்பும், டிரைவர்லெஸ் இயக்கத்திற்கு ஏற்ற நவீன சிக்னல் அமைப்பும் உள்ளன.

தொடர்ந்து ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தரிசனம் மற்றும் பூஜை செய்த பிறகு, ஐஐடி மெட்ராஸில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் பிரைன் சென்டரைப் பார்வையிடுவார். பிற்பகல் 1.30 மணியளவில் ₹13,000 கோடிக்கும் அதிகமான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றுவார். மாலை 3 மணியளவில் ஜெயகோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 3.45 முதல் 4.00 மணியளவில் டெல்லிக்குத் திரும்புவார்.

சுமார் ₹3,700 கோடி மதிப்பிலான NH-744, மதுரை ரிங் ரோடு, திருவாரூர் பைபாஸ் உள்ளிட்டவை. துறைமுகங்கள்: சென்னை, காமராஜர், V.O. சிதம்பரனார் துறைமுகங்களில் சேமிப்பு முற்றம், க்ரூஸ் டெர்மினல், கடல் ஊழியர் கிளப் உள்ளிட்ட

பழனி, வேலூர் கண்டோன்மென்ட் உள்ளிட்ட 5 அம்ரித் பாரத் நிலையங்கள். பெட்ரோலியம்: CPCL மணலி சுத்திகரிப்பு நிலையத்தில் LOBS திட்டம்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு அமலில் உள்ளது. 15,000 முதல் 22,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மீனம்பாக்கம், கிண்டி, போரூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக மற்றும் கனரக வாகனங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை போக்குவரத்து மாற்று வழிகள் அமலில் இருக்கும்.

இந்த வருகை தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.