இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிகழ்வில் கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் MBBS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட தலைவர் ஜெயரங்க மணி, மேற்கு மாவட்ட தலைவர் திருமதி லாவண்யா, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சந்திர கோதண்டபாணி, திரு.சுபமணிகண்டன், திரு.செந்தில்குமார், அருண் உள்ளிட்ட பல்வேறு மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள், தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்றும், ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.



