தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10:30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமை தாங்குகிறார். மாநிலத்தில் நிலவி வரும் பல்வேறு முக்கியச் சூழ்நிலைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலவரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படவுள்ளது.
மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது பற்றியும், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. அத்துடன் தமிழகத்தில் புதிதாக செயல்படுத்தப்பட உள்ள முக்கிய திட்டங்கள் மற்றும் தொழிற்துறை சார்ந்த புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்திற்குப் பிறகு அரசின் முக்கிய முடிவுகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



