அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி நேரத்திலும் உணவு இடைவேளை நேரத்திலும் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணி நேரத்தில் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.
உணவு இடைவேளை நேரத்திலும் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற அனுமதி இல்லை.
பள்ளி வளாகத்தில் ஏதேனும் அசாதாரண நிகழ்வுகள் நடந்தால், உடனடியாக உயர் அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். அசாதாரண சூழல் ஏற்பட்டால் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.



