தவெக அரசு ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குவிய ஆரம்பித்துவிட்டன. குழந்தைகள் காணாமல் போவது, படுகொலைகள், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த நிலை, விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்வு இவை அனைத்தும் மக்களை அன்றாட வாழ்விலேயே பயத்தோடும் கோபத்தோடும் வைத்திருக்கின்றன.
இந்த சூழலில் தவெக அரசு என்ன செய்கிறது மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பதிலாகஊழலுக்கு எதிரான போர் என்ற பெயரில் அரசியல் நாடகம் நடத்துகிறது.
அன்பில் மகேஷ் கைது அதன் சமீபத்திய காட்சி.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆன உடனேயே கைது, ஊடகங்களில் பெரிய ஹைப் நாங்கள் ஊழலை ஒழிக்கிறோம்” என்ற பிரச்சாரம் இவை அனைத்தும் ஒருங்கிணைந்த நாடகத்தின் பகுதிகள். உண்மையில் இது மக்கள் கோபத்தைத் திசைதிருப்பும் உத்தி.
ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு, விலைவாசி, அடிப்படை நிர்வாகம் ஆகியவற்றில் தோல்வி அடைந்துவிட்ட நிலையில் திமுகவை கைது செய்கிறோம் என்ற காட்சியைக் காட்டி மக்களை மயக்க முயற்சி செய்கிறார்கள். இது புதியதல்ல. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியும் தன் தோல்வியை மறைக்க முந்தைய ஆட்சியைப் பழிவாங்கும் நாடகத்தை அரங்கேற்றுவது வழக்கம். தவெகவும் அதே பாதையில் நடந்துகொண்டிருக்கிறது.
மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாதபோது, அரசியல் பழிவாங்கலை நீதி என்று காட்டும் இந்த நாடகம் நீண்ட நாள் நிற்காது. மக்கள் அனுபவிக்கும் துயரத்தை இந்த ஒரு கைதால் மறைக்க முடியாது.
தவெக அரசின் இந்த நாடகம் மக்கள் துயரை மறைக்கும் மலிவான அரசியல் உத்தி.



