கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

அந்த மனுவில், விருத்தாசலம் தொகுதி பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் தனி மாவட்டமாக அறிவிக்க அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளது என்றும், மாவட்டமாக அறிவிக்கப்பட்டால் நிர்வாக வசதியும், வளர்ச்சி திட்டங்களும் மக்களை விரைவாக சென்றடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொகுதிக்குட்பட்ட சாலை வசதி, குடிநீர் பிரச்சனை, விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகை, அரசு மருத்துவமனை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்தார்.

அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததாக தகவல்.

இந்த சந்திப்பின் போது தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.