விருத்தாசலம் சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள இரும்பு மற்றும் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில், டிஜிட்டல் பணப்ப பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்களிடம் கூடுதல் வரி வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்திய அரசாங்கம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை (UPI - G-Pay, PhonePe, Paytm) ஊக்குவித்து வரும் நிலையில், இக்கடையில் G-Pay, Paytm, PhonePe போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அனுமதி இல்லை என்றும், மீறிப் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்கள் கூடுதல் 18% வரி செலுத்த வேண்டும் என்றும் கடை சுவரொட்டியில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிருப்தி தெரிவித்துள்ள வாடிக்கையாளர்கள்,

அரசாங்கம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு எவ்வித கூடுதல் வரியும் விதிக்காத நிலையில், இத்தகைய கடைகள் கூடுதல் ஜிஎஸ்டி மற்றும் வரி பெயரில் வாடிக்கையாளர்களிடம் தன்னிச்சையாகப் பணம் வசூலிப்பது நுகர்வோர் உரிமையை மீறும் செயலாகும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.