தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகளின் ஆதார் விவரத்தை கைரேகை மூலம் சரிபார்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் குடும்ப உறுப்பினர்களின் கைரேகை சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 96.57 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளன.
மீதமுள்ள பணிகளை நூறு விழுக்காடு நிறைவு செய்யும் பொருட்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மட்டும் இந்த முகாமில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே இதுவரை நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகைப் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் இன்று நடைபெறும் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



