ஒருங்கிணைந்த மனிதநேயம் என்ற உயரிய சிந்தனையை உலகிற்கு எடுத்துரைத்து, தேசத்தின் பண்பாடு, சமூக ஒற்றுமை மற்றும் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு தனது வாழ்நாளை அர்ப்பணித்த மகத்தான சிந்தனையாளர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் பிறந்த நாள் இன்று!

பாரதிய ஜன சங்கம் கட்சித் தலைவர்களில் முதன்மையானவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர். அவரின் எளிமை, நேர்மை, தேசப்பற்று மற்றும் அர்ப்பணிப்பு மிக்க அவரது பொதுவாழ்க்கை, பாரதத்தின் எதிர்காலம் குறித்த ஆழமான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது. சமூகத்தின் கடைக்கோடி மனிதரையும் முன்னேற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற அவரது சிந்தனைகள், இன்றும் பொதுச்சேவையில் ஈடுபடுவோருக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன.

அவரது சிந்தனைகளும், தேசத்திற்கான அர்ப்பணிப்பும் என்றும் நம்மை வழிநடத்தட்டும்.